தும்மலின் போது பேண வேண்டிய ஒழுங்கு முறைகள்

ஒருவர் தும்மும் போது பேண வேண்டிய ஒழுங்கு முறைகளை நபி ஸல்) அவர்கள் நமக்கு கற்றுத் தந்திருக்கின்றார்கள்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:

“நபி (ஸல்) அவர்கள் தும்மினால் தமது கையை அல்லது ஆடையை வாயில் வைத்து சப்தத்தைத் தாழ்த்திக் கொள்வார்கள்”. ஆதாரம்:: அபூதாவூத்

தும்மினால் கூறவேண்டியவைகள்:

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (இதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள்” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா(ரலி), ஆதாரம் : புகாரி.

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *