உம்ராவின் சட்டதிட்டங்கள் – சுருக்கமான விளக்கம்

உம்ரா

உம்ரா செய்வது ஒவ்வொரு முஸ்லிம் மீதும் வாழ்நாளில் ஒரு முறை கடைமையாகும். அல்லாஹ் கூறுகிறான்:

அல்லாஹ்வுக்காக உம்ராவையும் ஹஜ்ஜையும் நீங்கள் நிறைவு செய்யுங்கள். (2:196)

உம்ரா, ஒரு முஸ்லிம் முடிந்த வரை திரும்பத் திரும்ப செய்ய வேண்டிய சிறந்த செயல்களில் ஒன்றாகும். உம்ரா செய்யக் கூடியவர் உம்ராவுடைய வணக்கங்களில் முதன் முதலில் செய்ய வேண்டியது இஹ்ராமாகும்.

இஹ்ராம்

இஹ்ராம் என்பது ஹஜ் அல்லது உம்ரா உடைய வணக்கத்தில் பிரவேசிப்பதாகும். இஹ் ராமிலுள்ளவருக்கு அதற்கு முன்னர் ஹலாலாக இருந்த சில காரியங்கள் ஹராமாகி விடுகி ன்றன. ஏனெனில் அவர் ஒரு வணக்கத்தில் புகுந்துவிட்டார். ஹஜ் அல்லது உம்ராவை வி ரும்புகிறவர் மக்காவிற்கு வெளியில் நபி(ஸல்)அவர்கள் நிர்ணயம் செய்த எல்லைகளில் ஏதே னும் ஒரு எல்லையிலிருந்து முன்னோக்கி வருபவராக இருந்தால் இஹ்ராம் கட்டாயமாகும்.

எல்லைகள்

1- துல்ஹுலைஃபா: இது மதீனாவிற்குச் சமீபமாக உள்ள ஒரு கிராமமாகும். தற்போது இதற்கு(அப்யார் அலி)எனக் கூறப்படுகிறது. இது மதீனாவாசிகளுக்குரிய எல்லையாகும்.

2- அல்ஜஹ்ஃபா: இது ராபிஃக் என்னும் ஊருக்கு சமீபமாக உள்ள ஒரு சிறிய ஊராகும். தற்போது மக்கள் ராபிஃகிலிருந்தே இஹ்ராம் கட்டிக் கொள்கிறார்கள். இது சிரியாவாசிகளி ன் எல்லை.

3- கர்னுல் மனாஸில்: (ஸைலுல்கபீர்) இது தாயிஃபிற்குச் சமீபமான ஒரு இடம். இது நஜ்து வாசிகளின் எல்லையாகும்.

4- யலம்லம்: இது மக்காவிலிருந்து சுமார் 70 கி.மீ. தூரத்திலுள்ளது. இது யமன்வாசிகளி ன் எல்லையாகும். இந்தியாவிலிருந்து வருபவர்களுக்கும் இதுவே எல்லையாகும்.

5- தாதுல் இர்க்: இது இராக்வாசிகளின் எல்லையாகும்.

இவ்வைந்து இடங்கள் மேலே குறிப்பிட்ட ஊர்காரர்களுக்கும் இவ்விடங்கள் வழியாக வருகின்றவர்களுக்கும் உரிய எல்லைகளாகும். இந்த எல்லைளுக்கு உள்ளே உள்ளவர்க ளும், ஹரமில் உள்ளவர்களும் அவர்கள் இருக்கின்ற இடங்களிலிருந்தே இஹ்ராம் கட்டிக் கொள்ள வேண்டும்.

எல்லையில் செய்ய வேண்டியவை

இஹ்ராமுக்கு முன் செய்ய வேண்டிய சுன்னத்துகள்:

1- நகங்களை வெட்டுவது, அக்குள் முடிகளைப் பிடுங்குவது அல்லது சிரைப்பது, மீசை யைக் கத்தரிப்பது, மறைவிடத்தின் முடியைச் சிரைப்பது, குளிப்பது, உடம்புக்கு மட்டும் மணம் பூசிக் கொள்வது ஆடைகளுக்குப் பூசக்கூடாது.

2- தைய்யலாடைகளைக் கழைவது, கீழாடையும் மேலாடையும் அணிதல், பெண் தன்னை மூடி மறைத்துக் கொள்வதில் கவனம் செலுத்துவதுடன் தான் விரும்பிய ஆடைகளை அணிந்து கொள்ளலாம். அழகலங்காரங்களை வெளிப்படுத்தக் கூடாது. அன்னிய ஆடவர் கள் வரும்போது முகத்தையும் முன்கைகளையும் மறைத்துக் கொள்ள வேண்டும். கையுறைகளையும் முகமூடி அணிவதையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

3- பள்ளிக்குச் சென்று அந்நேரம் தொழுகை நேரமாக இருந்தால் ஜமாஅத்துடன் தொழு வது அல்லது ஒலுவின் இரு ரக்அத்துகளைத் தொழுவது. அதன் பின்னர் இஹ்ராமைத் தொடங்குவது.

ஆகாயத்தில் பயணம் செய்பவராக இருந்தால் எல்லையில் இஹ்ராம் கட்டிக் கொள்வது கட்டாயமாகும். எல்லையைத் தெரிந்து கொள்வது கஷ்டமாக இருந்தால் அதற்கு முன்னர் போதுமான கால அளவில் கட்டிக்கொள்ள வேண்டும்.

அவன் எல்லையில் செய்ய வேண்டிய சுத்தம், மணம் பூசுதல், நகங்கள் வெட்டுதல், இஹ்ராம் ஆடை அணிதல் ஆகியவற்றை அவன் விரும்பினால் விமானத்தில் ஏறுவதற்கு முன்னரோ அல்லது விமானத்தில் வைத்தோ முழுமையாகச்செய்து கொள்ளலாம். பின்னர் எல்லையை அடைவதற்கு முன்னர் அல்லது அதை அடைந்து கொள்ளும் நேரத்தில் இஹ்ராமை நிய்யத் செய்து கொள்ளவும்.

இஹ்ராம் முறை

லப்பைக் உம்ரதன் என்று கூறி இஹ்ராம் கட்டிக் கொள்ள வேண்டும். இஹ்ராம் கட்டிக் கொண்ட பின்னர் தல்பியாச் சொல்வதும் அதை இஹ்ராம் கட்டியதிலிருந்து கஃபத்துல்லா ஹ்வில் வலம் வருவதை ஆரம்பிக்கும் வரை திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருப்பதும் சுன்னத்தாகும்.

தல்பியா:

லப்பைக் அல்லாஹும்ம லப்பைக், லப்பைக் லாஷரீக்கலக லப்பைக், இன்னல் ஹம்த வன்நிஃமத்த லக வல்முல்க் லாஷரீக்க லக்.

لًبّيْكَ اَللّھُمَّ لَبَّيْكَ، لَبَّيْكَ لا شَرِيْكَ لَكَ لَبَّيْكَ، إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ لاشَرِيْكَ لَك.

பொருள்: வந்துவிட்டேன் இறைவா! உன்னிடமே வந்து விட்டேன்! உன்னிடமே வந்து விட்டேன்! உனக்கு யாதொரு இணையுமில்லை. உன்னிடமே வந்து விட்டேன். நிச்சயமாக புகழும் அருட்பாக்கியங்களும் ஆட்சியும் உனக்கே உரியன. உனக்கு யாதொரு இணையுமில்லை.

இஹ்ராமில் தடுக்கப்பட்டவை

இஹ்ராம் கட்டிக் கொண்டவருக்கு பின் வருபவை ஹராமாகும்.

1- தலை மற்றும் உடம்பின் ஏனைய பாகங்களிலுள்ள முடிகளை நீக்குவது. எனினும் தே வையின் நிமித்தம் இலேசாகத் தலையைச் சொரிவதால்(முடி விழுந்து விடுவதில்) குற்றமில்லை.

2- நகங்களை வெட்டுதல். எனினும் நகம் உடைந்துவிட்டால் அல்லது அது அவனுக்குத் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தால் அதை வெட்டுவது குற்றமல்ல.

3- வாசனை சோப்பு போன்ற வாசனையுள்ள பொருட்களை உபயோகிப்பது.

4- உடலுறவு கொள்ளல், மனைவியை இச்சையுடன் பார்த்தல், அணைத்தல், முத்தமிடுத ல் மற்றும் திருமணம் போன்ற உடலுறவைத் தூண்டக் கூடிய காரியங்களைச் செய்தல்.

5- கையுறைகள் அணிதல்.

6- வேட்டைப் பிராணிகளைக் கொல்லுதல்.

இவ்வனைத்தும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஹராமாகும்.

ஆண்களுக்கு அதிகப் படியாக இன்னும் சில ஹராமாகின்றன.

அ- தையல் ஆடை அணிவது. எனினும் இஹ்ராமிலுள்ளவன் பெல்ட், கண்ணாடி, வாட்ச் போன்ற தேவையுள்ள பொருட்கள் அணிவது கூடும்.

ஆ- தலையை ஒட்டினாற்போல ஏதேனும் கொண்டு தலையை மறைத்தல். தலையோடு ஒட்டாமல் சற்று உயரமாக வைத்து தலையை மறைப்பது குற்றமில்லை. உதாரணமாக குடை, வாகனம், கூடாரம் போன்றவற்றிற்குள் நுழைந்து கொள்வதைப் போல.

– காலுறை அணிவது. செருப்புக் கிடைக்கவில்லையானால் பூட்ஸ் அணிந்து கொள்ளலாம்.

தடுக்கப்பட்ட இவற்றில் ஒன்றை யாரேனும் செய்து விட்டால் அவனுக்கு மூன்று நிலைகள் உள்ளன.

1- தக்ககாரணமின்றிச் செய்பவன். இவன் பாவியாவான் அபராதமுண்டு.

2- தேவைக்காகச் செய்பவன். இவன் பாவியாகமாட்டான். அபராதமுண்டு.

3- தக்ககாரணத்துடன் செய்பவன். அதாவது அறியாமலோ, மறந்தோ, நிர்ப்பந்தமாகவோ செய்வது போல. இவனுக்குக் குற்றமுமில்லை. அபராதமுமில்லை.

தவாஃப்(வலம் வருதல்)

மஸ்ஜிதுல் ஹராமில்(கஃபத்துல்லாவில்);நுழையும் போது வலது காலை வைத்து,

பிஸ்மில் லாஹி, வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹ் அல்லாஹும் மக்ஃபிர்லீ துநூபி வஃப்தஹ்லீ அப்வாப ரஹ்மதிக

என்று கூறுவது சுன்னத்தாகும்.

بِسْمِ للهِّ وا لصَّلاَةُ والسَّلاَمُ عَلى رَسُوْلِ للهِّ اَللّھُمَّ اغْفِرْ ليِ ذُ نُوْبِي وَا فْتَحْ لِي اَبْوَابَ رَحْمَتِكَ

(பொருள்: அல்லாஹ்வின் பெயர் கூறி நுழைகிறேன். கருணையும் ஈடேற்றமும் அல்லா ஹ்வின் தூதரின் மீதும் உண்டாவதாக! இறைவா! எனது பாவங்களை மன்னித்துவிடு உனது அருள் வாயல்களை எனக்குத் திறந்துவிடு)

இந்தத் துஆ எல்லாப் பள்ளிகளுக்கும் பொதுவானதாகும். பின்னர் உடனடியாக கஃபா வை வலம் வருவதற்காக அதன் பக்கம் சென்றுவிட வேண்டும். தவாஃப் என்பது அல்லாஹ்வுக்கு வணக்கம் செய்யும் எண்ணத்தில் ஹஜருல் அஸ்வதிலிருந்து ஆரம்பித்து இடது புறமாக கஃபாவை ஏழு முறை சுற்றிவருவதாகும். முடிக்கும் போது ஹஜருல் அஸ்வதிலே யே முடிக்க வேண்டும். தவாஃப் செய்யும் போது ஒலுவுடன் இருக்க வேண்டும்.

தவாஃப் செய்யும் முறை

1- ஹஜருல் அஸ்வதின் பக்கம் சென்று, அதைத் தனது வலது கையால் தொட்டு, பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர் எனக் கூறிக் கொள்ளவேண்டும்.

இத்துடன்

2 அல்லாஹும்ம ஈமானம்பிக வதஸ்தீகம் பிகிதாபிக வவஃபாஅம் பிஅஹ்திக வத்திபாஅன் லிசுன்னத்தி நபிய்யிக

என்பதையும் சேர்த்து சொல்வது சிறந்ததாகும். முடிந்தால் அக்கல்லை முத்தமிட்டுக் கொள்ளவேண்டும். முத்தமிடமுடியவில்லையெனில் அதைக் கையால் தொட்டு அந்தக் கை யை முத்தமிட்டுக்கொள்ள வேண்டும். ஹஜருல் அஸ்வதைத் தொட முடியவில்லையானால் அதை முன்னோக்கி, அல்லாஹு அக்பர் எனக் கூறி தனது கையால் அதன் பால் சுட்டிக் காட்டிக்கொள்ள வேண்டும். தனது கையை முத்தமிடக் கூடாது. பின்னர் கஃபத்துல்லா வை தனது இடப்புறமாக்கி, தவாஃபைத் தொடங்க வேண்டும். தான் விரும்பிய துஆக்களைக் கேட்டுக் கொள்ளலாம் அல்லது தனக்குத் தெரிந்த குர்ஆன் வசனங்களை ஓதிக் கொள்ளலாம். தனது மொழியில் தனக்கும், தான் விரும்பியவருக்கும் துஆ செய்து கொள் ளலாம். இங்கு துஆ செய்வதற்கென குறிப்பான துஆக்கள் ஏதுமில்லை.

2- ருக்னுல் யமானியை அடைந்துவிட்டால், முடிந்தால் அதைத் தொட்டு பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர் எனக் கூறிக் கொள்ள வேண்டும். தனது கையை முத்தமிடக்கூடாது. முடியாவிட்டால் தொடர்ந்து நடந்து கொண்டிருக்க வேண்டும். அதன் பக்கம் தனது கை யால் சுட்டிக் காட்டடுவதும், தக்பீர் சொல்வதும் கூடாது. ருக்னுல் யமானிக்கும் ஹஜருல் அஸ்வதிற்குமிடையில்

رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الأخِرَةِ حَسَنَةً وَّقِنَا عَذَابَ النَّارِ

‘ரப்பனா ஆதினா ஃபித்துன்யா ஹஸனதன் வஃபில் ஆகிரதி ஹஸனதன் வகினா அதா பன்நார்’

எனக் கூறிக் கொள்ள வேண்டும்.

3- ஹஜருல் அஸ்வதை அடைந்துவிட்டால் வலக் கையால் தொட வேண்டும். முடியவில் லையானால் அல்லாஹு அக்பர்எனக் கூறி தனது கையால் சுட்டிக் காட்டிக் கொள்ள வேண்டும். இப்படிச் செய்வது கொண்டு தவாஃபின் ஏழு சுற்றுகளில் ஒரு சுற்று முடிவடைந் து விடுகிறது, மீதமுள்ள சுற்றுக்களையும் இவ்வாறே பூர்த்தி செய்யவும்.

4- வலம் வருவதைத் தொடர்ந்து செய்யவேண்டும். ஏழு சுற்றுக்களைப் பூர்த்தியாக்கும் வரை முதல் சுற்றில் செய்தது போலவே செய்து கொள்ள வேண்டும். ஹஜருல் அஸ்வதை க் கடந்து செல்லும் போதெல்லாம் தக்பீர் சொல்லிக் கொள்ள வேண்டும். இது போன்றே ஏழாவது சுற்றுக்குப் பின்னரும் தக்பீர் சொல்லிக் கொள்ள வேண்டும்.

முதல் மூன்று சுற்றுக்களில் தொங்கோட்டம் ஓடுவது சுன்னத்தாகும். மீதமுள்ள நான் கு சுற்றுக்களில் நடந்தே செல்ல வேண்டும். தொங்கோட்டம் என்பது கால்களை (எட்டி வைக்காமல்) சுருக்கி வைத்து சற்று வேகமாக நடப்பதாகும். மேலும் இந்த தவாஃபில் மே லாடையின் நடுப்பகுதியை வலது அக்குளுக்குக் கீழ் வழியாகக் கொண்டு வந்து ஆடையி ன் இரு ஓரங்களையும் இடது தோள் புஜத்தின் மீது போட்டு மூடிக் கொள்ள வேண்டும். வலது தோள் புஜம் மட்டும் திறந்திருக்க வேண்டும். இதுவும் சுன்னத்தாகும்.

தொங்கோட்டமும் மேலாடையை இவ்வாறு போட்டுக்கொள்வதும் உம்ரா செய்யக் கூடி யவர், ஹஜ் செய்யக் கூடியவர் மக்காவுக்கு வரும்போது செய்யக் கூடிய முதல் தவாஃபில் மட்டும்தான். மேலும் இவ்விரண்டும் ஆண்களுக்கு மட்டும்தான்.

தவாஃபுக்குப் பின்னர் மகாம் இப்றாஹீமுக்குப் பின்னால் இரண்டு ரக்அத்துக்கள் தொ ழுவது சுன்னத்தாகும்.

அப்படித் தொழும்போது மகாம் அவனுக்கும் கஃபத்துல்லாவுக்குமி டையே இருக்க வேண்டும். முதல் ரக்அத்தில் ஃபாத்திஹாவும் குல்யா அய்யுஹல் காஃபிரூ னும் இரண்டாவது ரக்அத்தில் ஃபாத்திஹாவும் குல்ஹவல்லாஹுஅஹதும் ஓதிக் கொள்ள வேண்டும். கடுமையான நெருக்கடியினால் மகாம் இப்றாஹீமுக்குப் பின்னால் தொழ முடிய வில்லையானால் பள்ளியின் எந்த இடத்தில் வேண்டுமானாலும் தொழுது கொள்ளலாம். ஸம் ஸம் தண்ணீரை வயிறு புடைக்க அதாவது அதிகமாகக் குடிப்பது சுன்னத்தாகும்.

சயீ செய்வது

பின்னர் சயீ செய்யுமிடத்திற்குச் சென்று, ஸஃபாவின் பக்க மாகச் செல்ல வேண்டும். அதன் பக்கம் நெருங்கிவிட்டால்

إن الصفا والمروة من شعائر لله

‘இன்னஸ் ஸஃபா வல்மர்வத்த மின் ஷஆயிரில்லாஹ்’

என்ற வசனத்தை ஓத வேண்டும். கஃபாவைக் காணுமளவிற்கு ஸஃபாவில் ஏறவேண்டும். பின்னர் கஃபாவை முன் னோக்கி தனது இரு கைகளையும் உயர்த்தி,

அல்லாஹ்வைப் புகழ்ந்து தான் விரும்பிய துஆவைக் கேட்டுக் கொள்ள வேண்டும். உதாரணமாக

لا إله إلا لله ولله أكبر؛ لا إله إلا لله وحده لا شريك له ؛ له الملك وله الحمد يحيي ويميت وھو علي كل شىء قدير؛ لا إله إلا لله
وحده أنجز وعده ونصر عبده وھزم الأحزاب وحده.

லாஇலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர் லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக்கலஹு லஹுல் முல்க்கு வலஹுல் ஹம்து யுஹ்யீ வயுமீத்து வஹுவ அலாகுல்லி ஷையின் கதீர், லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தா அன்ஜஸ வஃதா வநஸர அப்தா வஹ ஸமல் அஹ்ஸாப வஹ்தஹா

என மூன்று முறை கூறிக் கொண்டு நீண்ட நேரம் துஆச் செய்ய வேண்டும். பின்னர் அதிலிருந்து இறங்கி மர்வாவின் பக்கம் செல்ல வேண்டும். பச்சைத் தூணை அடைந்தால் அடுத்த பச்சைத் தூணை அடையும் வரை முடிந்த அளவு விரைந்து செல்வது சுன்னத் தாகும். இப்படிச் செய்யும் போது யாருக்கும் தொந்தரவு கொடுக்கக் கூடாது என்பது நிபந்தனையாகும். (விரைந்து செல்வது ஆண்களுக்கு மட்டுமே பெண்களுக்கல்ல)

மர்வாவை அடைந்து விட்டால் அதில் ஏறி கிப்லாவை முன்னோக்கி, கைகளை உயர்த் தி, ஸஃபாவில் கூறியது போலக் கூறிக்கொள்ள வேண்டும். இப்படி ஒருவர் செய்து விட்டா ல் அவர் சயீக்குரிய ஏழு தடவைகளில் ஒன்றை முடித்து விட்டார். துஆவிற்குப் பின்னர் மர் வாவிலிருந்து ஸஃபாவை நோக்கிச் செல்ல வேண்டும். முந்திய தடவை செய்தது போலவே செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு ஏழு தடவை செய்து கொள்ள வேண்டும். ஸயீயின் இடையில் துஆவை அதிகப்படுத்திக் கொள்வது சுன்னத்தாகும்.

ஸயீ செய்த பிறகு தலை முடியை முழுவதும் மழித்துக் கொள்ள வேண்டும். அல்லது முழுவதும் குறைத்துக் கொள்ள வேண்டும். என்றாலும் மழிப்பதே சிறந்தது. ஆனால் பெண்கள் தம் அனைத்து முடிகளிலிருந்தும் விரல் நுனிஅளவிற்கு(சுமார் 3 செ.மீ.)வெட்டிக் கொள்ள வேண்டும். இதன் பிறகு உம்ராவிலிருந்து விடுபடவேண்டும்.

இதுவே உம்ரா செய்யும் முறை.

உம்ராவின் கடமைகள்

1- இஹ்ராம்
2- தவாஃப்
3- ஸயீ

இவற்றில் ஏதேனும் ஒன்றை ஒருவர் விட்டுவிட்டால் அதை நிறைவு செய்யாதது வரை அவரது உம்ரா பூர்த்தியாகாது.

உம்ராவின் வாஜிபுகள்(முக்கியமானவைகள்)

1- எல்லையில் இஹ்ராம் செய்தல்
2- தலை முடியை மழித்தல் அல்லது குறைத்தல்.

இவற்றில் ஏதேனும் ஒன்றை ஒருவர் விட்டுவிட்டால் அவர் குர்பானி கொடுக்க வேண்டும்.

شعبة توعية الجاليات بالزلفي
Isinalin ng: Zulfi Foreigners’ Guidance Office
P.O. Box: 182 Zulfi 11932
Saudi Arabia
Tel.: 06 4225657
Fax: 00966 4224234

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed