இப்ராஹீம் அலை வாழ்விலிருந்து சில முன்மாதிரி முத்துக்கள்

1- அவர்கள் தனது வாழ்வில் சகல காரியங்களிலும் இறைவனையே சார்ந்திருந்தார்:

“எங்கள் இறைவா! உன்னையே முற்றிலும் சார்ந்திருக்கிறோம்; (எதற்கும்) நாங்கள் உன்னையே நோக்குகிறோம்; மேலும், உன்னிடமே எங்கள் மீளுதலும் இருக்கிறது,” (அல்குர்ஆன் 60: 4).

2- வாக்குறுதியை நிறைவேற்றுபவராக இருந்தார்:

“(அல்லாஹ்வின் ஆணையைப் பூரணமாக) நிறைவேற்றிய இப்ராஹீமுடைய (ஆகமங்களிலிருந்து அவனுக்கு அறிவிக்கப்படவில்லையா?)” (அல்குர்ஆன்53: 37).

3- ஒரு சமுதாயம் என அவர் போற்றபடுவதற்கு அவரிடம் காணப்பட்ட உயரிய பண்புகள் என்ன?:

1- அல்லாஹ்வுக்கு அடி பணிந்து செயல் பட்டார்.
2- அசத்தியலிருந்து முற்றிலும் விலகி நேரான வழியில் பயணித்தார்.
3- இனை வைப்பிலிருந்து முற்றிலுமாக விலகி ஓரிறைக் கொள்கையில் பயணித்தார்.
4- அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துபவராக இருந்தார்.

(படியுங்கள் அத்தியாயம் அந்நஹ்ல் 16: 120,121).

4- அன்னாரிடம் காணப்பட்ட மூன்று உயரிய நற்குணங்கள்:

“நிச்சயமாக இப்ராஹீம் சகிப்புத் தன்மை உடையவராகவும், இளகிய மனங்கொண்டவராகவும் (எதற்கும்) இறைவன் பால் முகம் திரும்புபவராகவும் இருந்தார்.” (அல்குர்ஆன் 11: 75).

5- தூய்மையான உள்ளம் கொண்டவர்:

“அவர் தூய நெஞ்சத்துடன் தம்முடைய இறைவனிடம் வந்தபோது (நபியே! நீர் நினைவு கூர்வீராக).” (அல்குர்ஆன் 37: 84).

6- தனக்கு ஸாலிஹான குழந்தையை இறைவனிடம் பிரார்த்தித்தார்;

“என்னுடைய இறைவா! நீ எனக்கு ஸாலிஹான ஒரு நன்மகனைத் தந்தருள்வாயாக” (என்று பிரார்த்தித்தார்).” (அல்குர்ஆன் 37: 100).

7- மனித குலத்தின் முன்னோடியாக எப்படி தேர்வு செய்யப்பட்டார்?:

“இப்ராஹீமை அவருடைய இறைவன் சில கட்டளைகளையிட்டுச் சோதித்தான்; அவற்றை அவர் முழுமையாக நிறைவேற்றினார்; நிச்சயமாக நான் உம்மை மக்களுக்கு இமாமாக(த் தலைவராக) ஆக்குகிறேன்” என்று அவன் கூறினான்.” (அல்குர்ஆன் 2: 124).

8- நன்மைகள் நடக்கும் போது அல்லாஹ்வைப் புகழந்தார்:

“எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது; அவனே (என்னுடைய) முதுமையில் இஸ்மாயீலையும், இஸ்ஹாக்கையும் (புதல்வர்களாக) எனக்கு அளித்தான்; நிச்சயமாக என் இறைவன் பிரார்த்தனையைக் கேட்பவன்.” (அல்குர்ஆன் 14: 39).

9- தனது நற்காரியங்களை ஏற்குமாறு அல்லாஹ்வைப் பிரார்த்திப்பவராக இருந்தார்”

“எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக; நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்” (என்று கூறினார்)” (அல்குர்ஆன் 2: 127).

10- தன்னையும், தனது சந்ததிகளையும் சிலை வணகத்த்தை விட்டுப் பாதுகாக்குமாறு பிரார்த்திப்பவராக இருந்தார்:

“என்னையும், என் மக்களையும் சிலைகளை நாங்கள் வணங்குவதிலிருந்து காப்பாற்றுவாயாக!” (அல்குர்ஆன் 14: 35).

11- தன் சமுதாயத்தின் மீது பேரண்பு மிக்கவராகத் திகழ்ந்தார்:

“எனவே, எவர் என்னைப் பின்பற்றுகிறாரோ அவர் என்னைச் சேர்ந்தவராவார். எவர் எனக்கு மாறு செய்கிறாரோ (அவர் என்னைச் சார்ந்தவர் இல்லை; என்றாலும்) நிச்சயமாக நீ மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் இருக்கின்றாய்.” (அல்குர்ஆன் 14: 36).

12- மனித குலத்துக்கு நேர்வழியையே விரும்பினார்:

“எங்கள் இறைவனே! அவர்களிடையே உன்னுடைய வசனங்களை ஓதிக் காண்பித்து; அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுத்து; அவர்களைத் தூய்மைப்படுத்தக் கூடிய ஒரு தூதரை அவர்களிலிருந்தே எழுந்திடச் செய்வாயாக – நிச்சயமாக நீயே வல்லமை மிக்கோனுமாகவும், பெரும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றாய்.” (அல்குர்ஆன் 02: 129).

13- மறுமையில் இறை மன்னிப்பை ஆதரவு வைப்பவராகவே இருந்தார்:

“நியாயத் தீர்ப்பு நாளன்று, எனக்காக என் குற்றங்களை மன்னிப்பவன் அவனே என்று நான் ஆதரவு வைக்கின்றேன்.” (அல்குர்ஆன் 26: 82).

“எங்கள் இறைவா! என்னையும், என் பெற்றோர்களையும், முஃமின்களையும் கேள்வி கணக்குக் கேட்கும் (மறுமை) நாளில் மன்னிப்பாயாக” (என்று பிரார்த்தித்தார்). (அல்குர்ஆன் 14: 41).

14- தொழுகைக்கு அவரது வாழ்வில் காணப்பட்ட முக்கியத்துவம்:

(“என்) இறைவனே! தொழுகையை நிலைநிறுத்துவோராக என்னையும், என்னுடைய சந்ததியிலுள்ளோரையும் ஆக்குவாயாக! எங்கள் இறைவனே! என்னுடைய பிரார்த்தனையையும் ஏற்றுக் கொள்வாயாக!” (அல்குர்ஆன் 14: 40).

“எங்கள் இறைவனே! நிச்சயமாக நான் என் சந்ததியாரிலிருந்தும், சங்கையான உன் வீட்டின் (கஃபாவின்) அருகே, விவசாயமில்லாத (இப்)பள்ளத்தாக்கில், எங்கள் இறைவனே! – தொழுகையை அவர்கள் நிலைநாட்டுவதற்காக குடியேற்றியிருகின்றேன்” (அல்குர்ஆன் 14: 37)

15- இஸ்லாத்தின் பெருமதியை தன் பிள்ளைகளுக்கு இவ்வாறு உணர்த்தினார்:

“இதையே இப்ராஹீம் தம் குமாரர்களுக்கு வஸிய்யத்து (உபதேசம்) செய்தார்; யஃகூபும் (இவ்வாறே செய்தார்); அவர் கூறினார்: “என் குமாரர்களே! அல்லாஹ் உங்களுக்குச் சன்மார்க்கத்தை (இஸ்லாமை) தேர்ந்தெடுத்துள்ளான். நீங்கள் முஸ்லிம்களாக அன்றி மரணிக்காதீர்கள்.” (அல்குர்ஆன் 02: 132)

✍நட்புடன்
அஸ்ஹர் யூஸுப்ஃ ஸீலானி
2022/06/30
➖➖➖➖➖➖➖➖➖➖➖

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...

By மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி

அழைப்பாளர், அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையம், அல்-ஜுபைல், சவூதி அரேபியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed