குர்ஆன், ஹதீஸை ஏன் பின்பற்ற வேண்டும்?

குர்ஆன், ஹதீஸை பின்பற்றுவது இறைவனின் கட்டளை!

“நீங்கள் முஃமின்களாக இருப்பின் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்” (அல்-குர்ஆன் 8:1)

“முஃமின்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்; நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கும் நிலையிலேயே அவரை புறக்கணிக்காதீர்கள்” (அல்-குர்ஆன் 8:20)

குர்ஆன், ஹதீஸை பின்பற்றினால் கிருபை செய்யப்படுவீர்கள்!

“அல்லாஹ்வுக்கும், (அவன்) தூதருக்கும் கீழ்படியுங்கள்; நீங்கள் (அதனால் அல்லாஹ்வினால்) கிருபை செய்யப்படுவீர்கள்” (அல்-குர்ஆன் 3:132)

குர்ஆன், ஹதீஸை பின்பற்றுபவர்கள் வெற்றியாளர்கள்!

“முஃமின்களிடம் அவர்களுக்கிடையே (ஏற்படும் விவகாரங்களில்) தீர்ப்புக் கூறுவதற்காக அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் (வரும்படி) அழைக்கப்பட்டால், அவர்கள் சொல்(வது) எல்லாம் ‘நாங்கள் செவியேற்றோம், (அதற்குக்) கீழ்படிந்தோம்’ என்பது தான்; இ(த்தகைய)வர்கள் தாம் வெற்றியடைந்தவர்கள்” (அல்-குர்ஆன் 24:51)

குர்ஆன், ஹதீஸை பின்பற்றாதவர்களுக்கான எச்சரிக்கைகள்!

“இன்னும் அல்லாஹ்வுக்கும் வழிபடுங்கள்; (அவன்) தூதருக்கும் வழிபடுங்கள்; எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்; (இதனை) நீங்கள் புறக்கணித்துவிட்டால், (நம் கட்டளைகளைத்) தெளிவாக எடுத்து விளக்குவது மட்டுமே நம் தூதர்மீது கடமையாகும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்” (அல்-குர்ஆன் 5:92)

அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் மாற்றம் செய்து உங்கள் அமல்களை பாழாக்கி விடாதீர்கள்!

“ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு வழிபடுங்கள். இன்னும் இத்தூதருக்கு கீழ்ப்படியுங்கள் – உங்கள் செயல்களை பாழாக்கிவிடாதீர்கள்” (அல்-குர்ஆன் 47:33)

குர்ஆன், ஹதீஸை பின்பற்றாமல் வேறு வழியைப் பின்பற்றினால் அவர்கள் வழிகேட்டிலேயே இருக்கிறார்கள்!

“மேலும், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப்பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை; ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள்” (அல்-குர்ஆன் 33:36)

குர்ஆன், ஹதீஸை பின்பற்றாமல் மற்றவர்களைப் பின்பற்றியவர்களின் மறுமை நிலை!

“நெருப்பில் அவர்களுடைய முகங்கள் புரட்டப்படும் அந்நாளில், ‘ஆ, கை சேதமே! அல்லாஹ்வுக்கு நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே! இத்தூதருக்கும் நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே!’ என்று கூறுவார்கள். ‘எங்கள் இறைவா! நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியவர்களுக்கும் வழிப்பட்டோம்; அவர்கள் எங்களை வழி கெடுத்துவிட்டார்கள்’ என்றும் அவர்கள் கூறுவார்கள். ‘எங்கள் இறைவா! அவர்களுக்கு இரு மடங்கு வேதனையைத் தருவாயாக! அவர்களைப் பெருஞ் சாபத்தைக் கொண்டு சபிப்பாயாக’ (என்பர்)” (அல்-குர்ஆன் 33:66-68)

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *