ஹஜ்ஜின் அர்கான்கள் மற்றும் வாஜிப்கள்

ஹஜ் கடமையின் அடிப்படைகள் (அர்கான்):

1- இஹ்ராம் அணிந்து நிய்யத் வைத்தல்.

2- 9 ஆம் நாள் அரஃபாவில் தங்குதல்.

3- தவாஃபுல் இஃபாளா செய்தல்.

4- ஸயீ செய்தல் (ஸஃபா – மர்வா இடையே ஓடுதல்).

இவற்றில் ஏதேனும் ஒன்று தவறினாலும் ஹஜ் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

ஹஜ்ஜின் கட்டாயக் கடமைகள் (வாஜிபாத்):

1- குறிப்பிட்ட எல்லையில் (மீக்காத்தில்) இஹ்ராம் அணிதல்.

2- சூரியன் மறையும் வரை அரஃபாவில் தங்குதல்.

3- முஸ்தலிஃபாவில் இரவில் தங்குதல்.

4- அய்யாமுத் தஷ்ரீக் (11, 12, 13) நாட்களில் மினாவில் தங்குதல்.

5- ஜமராக்களில் கல் எறிதல்.

6- தலைமுடியை மழித்தல் அல்லது குறைத்தல் (மழிப்பதே சிறந்தது).

7- தவாஃபுல் விதாஃ (விடைபெறும் தவாஃப்) செய்தல்.

இவற்றில் ஏதேனும் ஒன்று தவறினால் அதற்காக ‘தம்’ (பரிகாரம்) ஆக ஒரு ஆட்டைக் குர்பானி கொடுக்க வேண்டும்.

About The Author

By மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி

அழைப்பாளர், அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையம், அல்-கோபார், சவூதி அரேபியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *