இஹ்ராமில் தடுக்கப்பட்டவைகள்

1- தலைமுடி உட்பட உடலின் மற்ற பகுதிகளில் உள்ள முடிகளை அகற்றுதல்.

2- நகம் வெட்டுதல்.

3- நறுமணம் பயன்படுத்துதல், வாசனை சோப்பு பயன்படுத்துவதும் இதில் அடங்கும்.

4- தைக்கப்பட்ட ஆடைகளை அணிவது (கால் உறை உட்பட) தடைசெய்யப்பட்டுள்ளது, ஆனால் கைக்கடிகாரம், பெல்ட், மூக்குக்கண்ணாடி போன்றவற்றை அணியலாம்.

5- ஆண்கள் தலையை மூடுதல்.

6- முத்தமிடுதல், விந்து வெளியேற்றுதல்.

7- உடலுறவு கொள்ளுதல்.

8- திருமண ஒப்பந்தம் செய்தல்.

9- வேட்டையாடுதல்.

பரிகாரம்-1

மேற்கூறியவற்றுள் (முதல் ஆறு விஷயங்களில்) ஏதேனும் ஒன்று நடந்துவிட்டால் அதற்குப் பரிகாரமாக கீழ்க்கண்ட மூன்றில் ஒன்றைச் செய்ய வேண்டும்:

1- ஒரு ஆட்டை (குர்பானி) அறுக்க வேண்டும். (அதை ஏழைகளுக்குப் பங்கிட வேண்டும், நாமும் உண்ணக் கூடாது).

2- அல்லது ஆறு ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். (ஒருவருக்கு ஒன்றரை கிலோ வீதம் வழங்க வேண்டும்).

3- அல்லது மூன்று நோன்புகள் (மக்காவில்) நோற்க வேண்டும்.

பரிகாரம்-2

மேற்கூறியவற்றுள் ஏழாவது விஷயமாகிய உடலுறவு கொள்வதை, இஹ்ராம் ஆடை அணிந்து நிய்யத் வைத்த பின் செய்வது மாபெரும் பாவமாகும். இந்த விதியை மீறி ஒருவர் முதல் இஹ்ராமிலிருந்து விடுபடுவதற்கு முன் உடலுறவு கொண்டால் கீழ்க்கண்ட தண்டனைகளுக்கு உள்ளாவார்:

1- அது மாபெரும் பாவமாகும் (அவன் மாபெரும் பாவியாவான்).

2- அவனது ஹஜ் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

3- தொடர்ந்து ஹஜ்ஜின் மீதிச் செயல்களைச் செய்து முடிக்க வேண்டும்.

4- இதற்குப் பரிகாரமாக அடுத்த முறை மீண்டும் ஹஜ் செய்யும் போது ஒரு ஒட்டகத்தை (குர்பானி) அறுக்க வேண்டும்.

முதல் இஹ்ராமிலிருந்து விடுபட்டு, இரண்டாவது இஹ்ராமிற்கு (தவாஃபுல் இஃபாளாவிற்கு) முன் மனைவியுடன் சேர்ந்தால், அவர் பரிகாரமாக ‘தம்’ (ஒரு ஆட்டை) குர்பானி கொடுக்க வேண்டும்.

பரிகாரம்-3

எட்டாவது விஷயமாகிய திருமண ஒப்பந்தம் செய்யும் நிலைக்கு ஒருவர் ஆளானால், அதற்காக அல்லாஹ்விடம் அவர் பாவமன்னிப்புத் தேட வேண்டும்.

பரிகாரம்-4

ஒன்பதாவது விஷயமாகிய வேட்டையாடுதல் (கடல் வேட்டை அல்ல), நிலப்பரப்பில் வேட்டையாடினால் வேட்டையாடப்பட்ட மிருகங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பரிகாரமாக ஆடுகளை அறுக்க வேண்டும்.

About The Author

By மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி

அழைப்பாளர், அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையம், அல்-கோபார், சவூதி அரேபியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *