இஹ்ராமின் எல்லைகள் (மீக்காத்)
1- கர்னுல் மனாஸில் (ஸைலுல் கபீர்): இது தாயிஃப் நகருக்கு அருகில் அமைந்துள்ள ஓர் இடமாகும். இது நஜ்த் வாசிகளுக்கும் அந்த வழியாக வரும் அனைவருக்கும் எல்லையாகும். “கர்னுல் மனாஸில்” என்பது மக்காவிற்கு கிழக்கே அமைந்துள்ள ஒரு மலையின் பெயராகும். இது மக்காவிலிருந்து 95 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
2- யலம்லம்: இது மக்காவிலிருந்து 60 கி.மீ தொலைவில் ஜித்தா பகுதியில் அமைந்துள்ள சஃதியா என்ற இடமாகும். இலங்கை மற்றும் இந்தியாவில் வசிப்பவர்களுக்கும், அந்த வழியாக வருபவர்களுக்கும் இதுவே எல்லையாகும்.
3- துல் ஹுலைஃபா: இது மதீனா முனவ்வராவுக்கு அருகில் அமைந்துள்ள ஓர் இடமாகும். இதற்கு அபார் அலி (அப்யார் அலி) என்றும் கூறப்படும். இது மதீனாவாசிகளுக்கும் அந்த வழியாக வரும் அனைவருக்கும் எல்லையாகும். இது மக்காவிற்கு வடக்கே 450 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
4- அல்-ஜுஹ்ஃபா: இது ராபிக் என்ற பகுதிக்கு அருகில் அமைந்துள்ள ஓர் இடமாகும். இது சிரியாவாசிகளுக்கும் அந்த வழியாக வருபவர்களுக்கும் உள்ள எல்லையாகும். இது மக்காவிற்கு வடக்கே சுமார் 187 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
5- தாத்து இர்க்: இது ஈராக் வாசிகளுக்கும் அந்த வழியாக வருபவர்களுக்கும் உள்ள எல்லையாகும்.
6- மக்காவாசிகள்: மக்காவாசிகள் மக்காவிலேயே இஹ்ராம் அணிய வேண்டும்.